27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஹிருணிகாவுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு – செய்திகளின் தொகுப்பு

நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு (Hirunika Premachandra) எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றம் அறிவிக்கும் தினத்தில் நேரில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் ஹர்டி ஜமால்டின் (Hardy Jamaldin) தாக்கல் செய்த முறைப்பாடு நேற்று (11) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன (Nishanka Bandula Karunaratne) மற்றும் சஷி மகேந்திரன் (Shashi Mahendran) ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த வழக்கு தொடர்பான எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரியுள்ளார்.

இதனடிப்படையில், நவம்பர் 29 ஆம் திகதிக்கு முன் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைகளை டிசம்பர் நானடகாம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..

Related posts

துப்பாக்கி வேட்டுக்களால் அதிரும் கொழும்பு-குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..!

sumi

1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன் பொங்கல் பெருவிழா

sumi

நெல்லியடி  மெ/மி/த/க/பாடசாலைக்கு  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

User1

Leave a Comment