நச்சுப் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகிக்கும் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி முதல் பொலிஸாரால் விசேட சோதனை சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்றையதினம் (22) 1,864 சுற்றிவளைப்புகளில் 1,810 ஆண்கள் மற்றும் 55 பெண்கள் உள்ளிட்ட 1,865 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 145 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 40 சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான 134 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகணத்தில் 799 சுற்றிவளைப்புகளில் 793 ஆண்களும் 19 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் மாகாணத்தில் 192 சுற்றிவளைப்புகளில் 184 ஆண்களும் 06 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 17 முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்புகளில் கைப்பற்றப்பட்ட போதைப்போருட்கள் விபரம்
ஹெரோயின் – 613.465 கிராம்
ஐஸ் – 746.795 கிராம்
கஞ்சா – 16.562 கி.கி.
கஞ்சா செடிகள் – 272,041
போதை மாத்திரைகள் – 3,142
ஏனைய போதைப்பொருட்கள் – 51.383 கி.கி.