27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

புத்தாண்டு மலரும் முன்பே அதிகரித்தது எரிபொருள் விலை

இன்று (ஜனவரி 01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 366 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.

ஒரு லீற்றர் டீசலின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை லீற்றர் ஒன்றிற்கு 48 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும்.

Related posts

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் அமைச்சரவைக்கு.!

sumi

அரசாங்க அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

User1

சிறுவர்களைச் சித்திரவதை செய்த சிறிலங்காப் புலனாய்வாளர்கள்!

sumi

Leave a Comment