27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்மட்டக்களப்பு செய்திகள்

உலக தொழுநோய் தினத்தினை முன்னிட்டு வளத்தாப்பிட்டி யில் நடமாடும் வைத்திய சேவை

உலக தொழுநோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் வைத்திய சேவை சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறித்த நடமாடும் வைத்திய சேவையினை ஏற்பாடு செய்திருந்தது.

பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம்.பௌஸாத், சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஐ.எம்.கபீர், உதவி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஜீவராணி சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததுடன் குறித்த நோய் தொடர்பாக வைத்திய ஆலோசனைகளையும் வழங்கினர்.

இந்நிகழ்வில் ADT அமைப்பினரும் பிராந்திய மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல். லபீர் மற்றும் ஜீ.சுகந்தன் ஆகியோரும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டதுடன் நிகழ்விற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
-நூருல் ஹுதா உமர்-

uuhg hhh jju jj

Related posts

650 கையடக்கத்தொலைபேசிகளுடன் நபரொருவர் கைது

User1

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள பெருமளவு இலாபம்

User1

16 இலட்சம் வாக்காளர்கள் வெளிநாடுகளில்…! : வாக்களிக்க எத்தனைப் பேர் இலங்கை வருவர்? 

User1

Leave a Comment