27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வைத்தியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

இலங்கையில் வருடாந்தம் 250 முதல் 300 புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக மஹரகம வைத்தியசாலையின் சிறுவர் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ குணசேகர தெரிவித்துள்ளார்.

சிறுவர் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அங்கு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா,

2021ஆம் ஆண்டில் 578 ஆண் குழந்தைகளும் 454 பெண் குழந்தைகளும் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரத்தப் புற்றுநோயானது சிறுவர்களிடையே மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும்.

மேலும், புகைபிடித்தல் மற்றும் வெற்றிலை உண்பது பெரியவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணம் என்றும்,

ஆனால் குழந்தைப் பருவத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கு இதுபோன்ற குறிப்பிட்ட காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வருடத்திற்கு 1,000 முதல் 1,200 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

டொக்டரின் மனைவியுடன் 27 வருட இணைபிரியா கள்ளக் காதல் கொலையில் முடிந்தது ஏன்? கொலையாளி பகீர் வாக்குமூலம்

sumi

புத்தளத்தில் 4 பேருந்துகளுக்கு தீ வைத்த நபர்கள்

User1

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் நாட்டவர்: சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

User1