29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஒட்டுசுட்டானில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை : இருவர் கைது

ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை முற்றுகையிட்ட ஒட்டுசுட்டான் பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கசிப்பு உற்பத்தி செய்யும் கோடாவுடன் மூன்று பரல்களையும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.08.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல் அறுமனாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக ஒட்டுசுட்டான் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரி.சுபேசன் தலைமையில் பொலிஸ் குழுவினர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

இதன்போது சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 475 லீற்றர் கோடாவுடன் மூன்று பரல்கள் கோடாவினையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புதுக்குடியிருப்பு சிவநகர், மந்துவில் ஆகிய பகுதிகளை சேர்ந்த 37, 55 வயதுடைய இருவராவர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒட்டுசுட்டான் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கட்டு துப்பாக்கி வெடித்ததில் போலீஸ் உத்தியோத்தர் ஒருவர்படுகாயம்

sumi

ஆண்டின் முதல் பெரு முழு நிலவு !

User1

நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதி: விஜித ஹேரத் தகவல்

User1

Leave a Comment