27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கோண்டாவிலில் விஜயதாஸ ராஜபக்சே

யாழ்ப்பாணத்திற்கு 07.08.2024 விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்சே பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

அதன் போது கோண்டாவில் பகுதியில் BCS மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டார்.

நிகழ்வில் உரையாற்றுகையில்,

பெரமுன கட்சியினர் என்னை தமது கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட அனுகி இருந்தனர். நான் அதனை மறுத்துள்ளேன். தற்போது இளம் அரசியல்வாதியொருவரை வேட்பளாராக களம் இறக்கியுள்ளனர். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடுவதே எனது இலக்கு.

எனது பெயரிலும் ராஜபக்ச உள்ளமையால் நான் முந்தைய அரசாங்கத்தின் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல. அந்த ராஜபக்ச குடும்பத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

நாட்டு மக்களுக்கும் இந்த அரசாங்கத்துடன் தொடர்புடையவராகவே என்னை தெரியும். ஆனால் நான் நீதியமைச்சராக சுயாதீனமாகவே இயங்கினேன்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் மீது மக்கள் முற்றிலும் நம்பிக்கையிழந்துள்ளமையை நான் அறிவேன். அதனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போது நாடாளுமன்ற இருக்கின்றவர்களில் 150க்கும் மேற்பட்டவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.

அதேவேளை  வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட நிதிகளில் 50 வீதத்திற்கும் அதிகமான நிதி திரும்புகிறது.

வடக்கு, கிழக்கு அதிகரிகளின் ஒத்துழைப்பு இல்லாமையே அதற்கு காரணம் என தெரிவித்தார்.  

Related posts

கடத்தல்காரருடன் கள்ள உறவில் இருந்த அழகியை தட்டி தூக்கிய பொலிசார்..!

sumi

பொன்.சுகந்தனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.

User1

அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் போலீசாரால் கைது

User1

Leave a Comment