29.2 C
Jaffna
September 20, 2024
உலக செய்திகள்

பங்களாதேஷின் இடைக்கால தலைவர்!

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றுள்ளார்.

பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவுக்கு தஞ்சம் தேடிச் சென்றார்.

இதனால் இடைக்கால அரசு அமையும் என பங்களாதேஷ் இராணுவ தளபதி தெரிவித்தார். அதற்கமைய நேற்றிரவு பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.

இடைக்கால அரசில் மாணவர் அமைப்பினர், பெண்கள், இந்துக்கள் கொண்ட ஆலோசனைக் குழு பதவி ஏற்றது. பங்களாதேஷ் வங்கியின் முன்னாள் ஆளுநர், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் உள்ளிட்டோர் பதவி ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டெஸ்ட் போட்டிக்காக இலங்கை வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி

User1

சிலியின் முன்னாள் ஜனாதிபதி ஹெலி விபத்தில் பலி

sumi

லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக ஆர்ப்பாட்டம்

User1

Leave a Comment