27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

வனஜீவராசிகள் திணைக்கள காணி இந்து மயானத்துக்காக கிழக்கு ஆளுனரால் விடுவிப்பு!

(படங்கள் இணைப்பு)

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பத்தினிபுர கிராம மக்களுக்கான  இந்து மயான காணி கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானால்  நேற்று (12) மாலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு பத்தினிபுர கிராமத்தில் வைத்து மக்களிடத்தில் வைத்து உரிய ஆவணம் உடன்  கையளிக்கப்பட்டது. சுமார் 25 வருடகாலமாக இந்து மயானம் இன்றி வாழ்ந்த மக்களுக்காக தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமான வர்த்தமாணி இடப்பட்ட காணியே ஒப்படைக்கப்பட்டது.

இதில் தம்பலகாமம் பிரதேச சபை செயலாளர் உட்பட பொது மக்கள் என பலரூம் கலந்து கொண்டதுடன் இவ் நீண்டகாலமாக நிலவிய இந்து மயான பிரச்சினைக்கு பத்து நாட்களுக்குள் தீர்வு பெற்று தந்த கிழக்கு மாகாண ஆளுனருக்கு மக்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.

இதன் போது திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்து நகர் கிராம மக்களும் தங்கள் வயல் நில குடியிருப்பு பகுதிகளை இலங்கை துறை முக அதிகார சபையினர் கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் ஆளுனரிடம் மக்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் உரிய சாதகமான நடவடிக்கை எடுப்பதாக மக்களிடத்தில் ஆளுனர் உறுதியளித்தார்…

Related posts

சுதந்திர தின எதிர்ப்பு – பல்கலையில் கறுப்புக்கொடி ..!

sumi

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

User1

மீண்டும் வரிசை யுகம்! ஜனாதிபதி ரணிலின் கடுமையான எச்சரிக்கை

User1

Leave a Comment