29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

ரணிலுக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கு அதிர்ச்சி

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான கடிதங்கள் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர் கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு அண்மையில் கூடியது.

கட்சியில் இருந்து ஒருவரை வேட்பாளரை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது. அத்துடன், அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில வாரங்களாக அக்கட்சியின் அரசியல் சபைக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

டயானா கமகேவை பிணையில் விடுவிக்க மன்றம் உத்தரவு !

User1

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் பிரசார அலுவலகங்கள் திறந்துவைக்கப்பு!

User1

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ,போராட்டத்திற்கு தடையுத்தரவு

User1

Leave a Comment