27.9 C
Jaffna
September 20, 2024
உலக செய்திகள்

பிறப்பு சான்றிதழுடன் வீடு திரும்பிய தந்தை.. சடலமாய் கிடந்த மனைவியும் குழந்தைகளும்..

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். அதிலும் மொத்த குடும்பத்தையும் இழந்து தனி ஆளாக உயிர்பிழைத்தவர்களின் வலி சொல்லி மாளாதது. அதை கண்முன் நிறுத்தும் விதமாக பாலஸ்தீன தந்தை ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிறந்து 4 நாட்களே ஆன தனது இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்த முகமது அபு அல்- கும்சான் என்ற அந்த தந்தைக்கு தனது மனைவியும் குழந்தைகளும் இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலில் இறந்துவிட்டனர் என்ற அதிர்ச்சியே மிஞ்சியது.

மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் ஃபாலா பகுதியில் நடந்த தாக்குதலில் முகமதின் மனைவி, பிறந்து நான்கு நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள் அசைல்[Aysel] மற்றும் அசெர் [Asser] உயிரிழந்துள்ளனர். 

கையில் இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை ஏந்தியவாறு முகமது கதறி அழும் வீடியோ போரின் கொடுமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 

அரசியல் தலைவர்களும் ஆயுத வியாபாரிகளும் லாபம் அடைவதற்காக உருவாக்கப்பட்ட போர் காலங்காலமாக அப்பாவி மக்களின் தலையிலேயே விடிவது மனிதக்குலத்தின் மீள முடியாத சாபம் ஆகும்.

Related posts

கட்டார் வாகன விபத்தில் 24 வயது அல்வாய் இளைஞர் உயிரிழப்பு ; திருமணம் செய்து சில வருடங்களில் துயரம் !

sumi

இஸ்ரேலுக்குள் களமிறங்கிய அமெரிக்கா படைகள் – அதிகரிக்கும் போர் பதற்றம்

Nila

நைஜீரியாவில் விபத்தில் சிக்கிய எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறியது – 48 பேர் பலி

User1

Leave a Comment