27.9 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

யாழ் காங்கேசன்துறை வந்தடைந்த சிவகங்கை பயணிகள் கப்பல்.!

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது.

இன்று குறித்த கப்பல் 47 பயணிகளுடன் இலங்கை (srilanka) காங்கேசன்துறைக்கு தனது பயணத்தை தொடங்கி உள்ளது.

அதற்கமைய அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்த சிவகங்கை கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வணிக வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் பயணிக்க ஒருவருக்கு 16,500 இலங்கை ரூபாய் ஒருவழி பயண கட்டணமும், 34,400 ரூபாய் இருவழி பயண கட்டணம் அறவிடப்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கப்பலில் பயணிகளுக்கு துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவர் தம்முடன் 60 கிலோ வரையான பொதியை எடுத்துச் செல்லவும் 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவுக்கு sailindsri.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று கப்பல் நிர்வாகம் தெ

Related posts

சாவகச்சேரியில் போலியான அனுமதிப் பத்திரத்துக்கு மணல் கடத்தலில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்!

User1

சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக பங்கேற்கும் ஓட்டமாவடி மாணவி!

sumi

கள்ள வாக்களிப்பவருக்கு 7 ஆண்டுகள் வாக்களிக்க தடை

User1

Leave a Comment