27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகப் போகும் நபர்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரலாற்றில் மிகவும் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற ஜனாதிபதியாவார் என்று முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன(Dr Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.

நான் முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் ஆரம்பத்தில் கூறிய கணிப்பீடுகள் தற்போது சரியாகியிருக்கின்றன. எனவே எனது இந்தக் கணிப்பீடும் பிழையாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு எதிர்வுகூறியுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சியில் இருந்து மேலும் பல பிரபலங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்(Ranil Wickremesinghe) இணைந்து கொள்ளவுள்ளனர். இன்னும் பலர் வரவிருக்கின்றனர்.

அவர்கள் தற்போது பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். விரைவில் அவர்கள் இணைந்து கொள்வார்கள் என்றும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.


இதேவேளை, எனது அரசியலில் ஒருபோதும் நான் கட்சித் தலைவர்களிடம் சிறைபட்டிருக்கவில்லை. நான் ஒரு போதும் கட்சித் தலைவர்களுக்கு அடிபணியவும் மாட்டேன்.

அடிபணிவதாக இருந்தால் இன்றிருக்கும் ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மாத்திரம்தான் எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆற்றில் நீரடியவர்களிற்கு நேர்ந்த கதி

sumi

சிங்கராஜ வனம் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை

Thinakaran

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 66 நாட்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் : தேர்தல் ஆணையகம்

User1

Leave a Comment