27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorized

130 அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றிணைந்து சோழன் உலக சாதனை

கொழும்பில் இயங்கி வரும் அஸ்மா பிரைடல் அகடமி பிரைவேட் லிமிடெட் சார்பாக இந்த சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்வானது நேற்றைய தினம் கொழும்பு கிங்ஸ் ஹாலில் நடைபெற்றது. இதில் இலங்கையின் பல மாவட்டங்களைச் சேர்ந்த 60‌ அழகுக்கலை நிபுணர்கள் நேரடியாகப் பங்கு கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திய அதேவேளை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மேலும் 70 அழகுக்கலை நிபுணர்கள் இயங்கலையூடாக பங்கு கொண்டார்கள். இந்த சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியின் போது மணப் பெண் முக அலங்காரம், ஐ மேக் அப், ஆரி வேர்க், கேக் தயாரிப்பு, கோஸ்மெடிக் அப்ளிகேஷன்ஸ், மெகந்தி ஆர்ட், ஆர்ட் க்ராப்ட், எம்பிரைடிங், ஃபேஷன் டிசைனிங் மற்றும் கைவினைப் பொருட் தயாரிப்பு போன்றவற்றை 20 நிமிடங்களில் செய்து முடித்து சோழன் உலக சாதனை படைத்தனர்.

இந்த உலக சாதனை நிகழ்வை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம், பீபுல் ஹொல்பிங் பீபல் பவுண்டேஷன் மற்றும் அஸ்மா பிரைடல் அகடமி பிரைவேட் லிமிடெட் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தன.

இந்தியாவில் இருந்து
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின்
தலைமைச் செயற்குழுவின் பொதுச் செயலாளர் திருமதி. ஆர்த்திகா நிமலன்,
இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் திரு.நாகவாணி ராஜா, பொதுச் செயலாளர் திரு.இந்திரநாத் பெரேரா,
இரத்தினபுரி மாவட்டத் தலைவர் திருமதி.பிரவீனா பாரதி, கண்டி மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரமோகன்,
அம்பாறை மாவட்டத் தலைவர் திரு. ஜலீல், புத்தளம் மாவட்டத் தலைவர் செல்வி.பாத்திமா சுபியானி மற்றும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் இயக்குநர் திரு. க்லோரன்ஸ் போன்றோர் நடுவர்களாக நிகழ்வைக் கண்காணித்து உறுதி செய்தனர்.

சோழன் உலக சாதனை படைத்த அழகுக்கலை நிபுணர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்ட __ அவர்கள் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், பேட்ச் மற்றும் நினைவுக் கேடயம் போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்‌‌.

நிகழ்வு ஒருங்கிணைத்து நடத்திய அஸ்மா பிரைடல் அகடமி பிரைவேட் லிமிடெட் அமைப்பின் நிறுவனர் திருமதி.அஸ்மா அவர்களை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் மற்றும் பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

Related posts

வாக்கு அட்டைகள் விநியோகம் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பம் !

User1

நாட்டின் நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பு: ரணில் பகிரங்கம்

User1

650 கையடக்கத்தொலைபேசிகளுடன் நபரொருவர் கைது

User1

Leave a Comment