29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorized

வௌ்ளப்பெருக்கு குறித்து முக்கிய அறிவிப்பு

களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் புலத்சிங்கள பிரதேசங்களில் பல வீதிகள் இன்னும் நீரில் மூழ்கி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், குக்குலே கங்கை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நிலைமை நிலவுவதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ். பி. சி. சுகீஸ்வர தெரிவித்தார்.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் இன்று(20) 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டுவிழா.!

sumi

மக்கள் வங்கியில் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை

User1

இரு யுவதிகளை காப்பாற்றிய பொலிஸார்

User1

Leave a Comment