27.9 C
Jaffna
September 20, 2024
கனடா செய்திகள்

கனடா வேண்டாம்… முடிவு செய்துள்ள சர்வதேச மாணவர்கள்

கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் அதிகமானோர் இந்தியாவிலிருந்து செல்பவர்கள் என்பது பலரும் அறிந்த விடயம்தான்.

அதிலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் கனடாவுக்கு கல்வி கற்கச் செல்கிறார்கள்.

இன்னொரு விடயம், கல்வி கற்கச் செல்வோரின் நோக்கம், கல்வி கற்பது மட்டும் அல்ல, கல்வி கற்கச் சென்றதும், தன் வாழ்க்கைத்துணையையும் கனடாவுக்கு வரவழைப்பதும், பின், கனடாவிலேயே குடியமர்வதும்தான் பெரும்பாலான சர்வதேச மாணவர்களின் திட்டம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

ஆனால், சர்வதேச மாணவர்கள் அதிகம் விரும்பும் கனடா, சமீப காலமாக மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஆகவே, சர்வதேச மாணவர்கள், கனடாவைப் புறக்கணிக்கத் துவங்கியுள்ளார்கள்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து கனடாவுக்கு கல்வி கற்க விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மட்டுமே, 70 முதல் 80 சதவிகிதம் வரை குறைந்துவிட்டதாக, கனடாவுக்கு மாணவர்களை அனுப்ப உதவும் ஏஜண்டுகள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், சர்வதேச மாணவர்கள் மட்டுமல்ல, வழக்கமாக கனடாவுக்கு புலம்பெயர்வது குறித்து ஆலோசனை கேட்பவர்கள் எண்ணிக்கை கூட கணிசமாக குறைந்துவிட்டதாகவும் இந்த ஏஜண்டுகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவில் பெருந்தொகை கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழன் கைது!

User1

கமலா ஹாரிஸ் உடன் மீண்டும் நேரடி விவாதம் கிடையாது: டொனால்ட் டிரம்ப்

User1

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கே ஆதரவு ; புடின் தெரிவிப்பு

User1

Leave a Comment