28 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்கனடா செய்திகள்

கமலா ஹாரிஸ் உடன் மீண்டும் நேரடி விவாதம் கிடையாது: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் விவாதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மேலும் ஒரு விவாதத்தில் சந்திக்க கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப், ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸ் உடன் நேருக்குநேர் விவாதம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கமலா ஹாரிஸின் வேண்டுகோள் செவ்வாய்க்கிழமை விவாதத்தில் அவர் தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டுகிறது. அதை சரி செய்வதற்கான மீண்டும் ஒரு விவாதத்தை எதிர்நோக்குகிறார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை விவாதத்தின்போது பொருளாதாரம், குடியேற்றம், கருக்கலைப்பு தடை ஆகியவற்றை பற்றி இரண்டு பேரும் காரசார விவாதம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அமெரிக்காவை சீர்குலைத்தவர். சீனாவுக்கு அமெரிக்காவை விற்றவர் என டொனால்ட் டிரம்ப்-ஐ கமலா ஹாரிஸ் கடுமையாக சாடினார்.

அதேவேளையில் கமலா ஹாரிஸ் ஒரு மார்சிஸ்ட். அவர் இஸ்ரேலை வெறுக்கிறார் என டிரம்ப் குற்றம்சாட்டினார்.

Related posts

லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக ஆர்ப்பாட்டம்

User1

கனடா முழுவதிலும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

User1

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி

sumi

Leave a Comment