27.9 C
Jaffna
September 20, 2024
கனடா செய்திகள்

கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் இளைஞன் – சந்தேக நபர்கள் கைது

கனடாவில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட Pickering நகரில் வசிக்கும் 28 வயதான சுலக்சன் செல்வசிங்கம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 15, 16 வயதுடைய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கடந்த ஜூலை மாதம் ஆறாம் திகதி ஸ்காப்ரோவின் வோர்டன் அவன்யூவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு அருகாமையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இது தொடர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், Oshawa, Stouffville நகரங்களைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.  

Related posts

கனடா அமெரிக்க எல்லையில் நிலைகுலைந்து சரிந்த ரயில்வே பாலம்

User1

கனடாவில் பாரிய வாகன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

User1

கமலா ஹாரிஸ் உடன் மீண்டும் நேரடி விவாதம் கிடையாது: டொனால்ட் டிரம்ப்

User1

Leave a Comment