27.9 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

GOAT படத்தின் பட்ஜெட்.. ரிலீஸுக்கு முன் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் இத்தனை கோடியா

பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள தளபதி விஜய்யின் GOAT திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவரவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. இதன்மூலம் GOAT திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

ட்ரைலர் வெளியிட்ட பிறகு பத்திரிகையாளர்களை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் சந்தித்தனர். அப்போது GOAT படம் லாபமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அர்ச்சனா கல்பாத்தி படம் எங்களுக்கு ரிலீஸுக்கு முன்பே லாபம் தான் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், GOAT படத்தின் பட்ஜெட் எவ்வளவு, தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தளபதி விஜய்யின் GOAT படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 333 கோடி ஆகுமாம். இதில் விஜய்யின் சம்பளம் மட்டுமே ரூ. 200 கோடி என சொல்லப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷன்கள் மற்றும் படப்பிடிப்பிற்காக செய்த செலவு என அனைத்தையும் சேர்த்து GOAT படத்தின் பட்ஜெட் ரூ. 333 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

ரூ. 333 கோடி செலவில் எடுக்கப்பட்ட GOAT திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 416 கோடிக்கு பிசினஸ் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ. 83 கோடி ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபம் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு திரையரங்க உரிமை – ரூ. 76 கோடி, கேரளா திரையரங்க உரிமை – ரூ. 16 கோடி, கர்நாடகா திரையரங்க உரிமை ரூ. 13 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா திரையரங்க உரிமை ரூ. 15 கோடி, இந்தி மற்றும் வட மாநில திரையரங்க – ரூ. 15 கோடி, ஒரிசா – ரூ. 25 லட்சம், வெளிநாட்டு திரையரங்க உரிமை ரூ. 70 கோடி, இசை உரிமை – ரூ. 24. டிஜிட்டல் உரிமை ரூ. 112 கோடி (நெட்பிளிக்ஸ்), சாட்டிலைட் உரிமை – ரூ. 85 கோடி (அனைத்து மொழிகளிலும் ஜீ நிறுவனம் வாங்கியுள்ளது).

மொத்தமாக GOAT திரைப்படத்தின் பிசினஸ் மட்டுமே ரூ. 416 கோடிக்கு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியபடி, படத்தின் பட்ஜெட் ரூ. 333 கோடி, பிசினஸ் செய்யப்பட்டது ரூ. 416 கோடி என்பதால், ரிலீஸுக்கு மும்பே தயாரிப்பாளருக்கு ரூ. 83 கோடி வரை லாபம் கிடைத்துள்ளது என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார். 

Related posts

ஒலிம்பிக் பளுதூக்குதலில் பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா

User1

இப்படி நடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை! வெளிப்படையாக கூறிய விஜய் பட நடிகை நிவேதா தாமஸ்

User1

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அதிரடி துடுபாட்ட வீரர்

User1

Leave a Comment