28.6 C
Jaffna
November 10, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

யானை தாக்குதலுக்கு இலக்காகி மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

மூதூர் – ஸ்ரீ நாராயணபுரம் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவனே யானை தாக்குதலுக்கு இலக்காகி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் கிளிவெட்டி மகாவித்தியாலயத்திற்கு பிரத்தியேக வகுப்பு ஒன்றிற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றபோது ஸ்ரீ நாராயணர் ஆலயத்திற்கு முன்னால் வைத்து யானை தாக்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (27) இரவு முதல் காட்டு யானைகளின் நடமாட்டம் அப்பகுதியில் இருந்ததாகவும், நீண்டகாலமாக மூதூர் பகுதியில் காட்டு யானைகளினால் தொடர்ச்சியான பல தாக்குதல் சம்பவங்களும் உயிரிழப்புச் சம்பவங்களும் பதிவாகி வருவதோடு பயிர்களையும் சேதம் செய்து வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related posts

கட்டைக்காட்டில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் தடைசெய்யப்பட்ட வலை பறிமுதல்

User1

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த லொறி !

User1

இலங்கையில் தோன்றிய அன்னை மேரி-விபரங்களை வெளியிட்ட பொலிசார்..!

sumi

Leave a Comment