27.9 C
Jaffna
September 20, 2024
உலக செய்திகள்

போர் நிறுத்த திட்டத்தை முன்வைக்க தயாராகும் உக்ரைன்

ரஷ்யாவுடனான(Russia) போர் இறுதியில் பேச்சுவார்த்தையிலேயே முடிவடையும், ஆனால் இதன் போது, கெய்வ் ஒரு வலுவான நிலையில் இருக்க வேண்டும் என்றும் உக்ரைன்(Ukraine) ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் கெய்வின் மூன்று வார கால ஊடுருவல் அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில்,  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம், தமது போர் நிறுத்த  திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் என்றும் கூறியுள்ளார். 

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவை கட்டாயப்படுத்துவதாகும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் கமலா ஹாரிஸுடனும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்புடனும் தமது திட்டத்தைப் பற்றி விவாதிக்கவுள்ளதாக உக்ரைனின் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

செப்டம்பரில் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், அதன்போது, பைடனைச் சந்திக்கத் தயாராகி வருவதாகவும் செலென்ஸ்கி கூறியுள்ளார். 

இதற்கிடையில், கடந்த வாரம் கெய்வ் சென்றிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று செவ்வாயன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடினார், உக்ரைன் மோதலுக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வை ஆதரிப்பதாக அவரிடம், மோடி கூறியுள்ளார்.

எனினும் இதன்போது புட்டின் வழங்கிய பதில் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

Related posts

ஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய 66இலங்கையர்கள்

sumi

கலைக்கப்பட்டது பங்களாதேஷின் நாடாளுமன்றம்

User1

ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ஆறுபேரின் உடல்கள் மீட்பு

User1

Leave a Comment