27.9 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

‘கோலி சோடா’வை மீண்டும் நம்பும் விஜய் மில்டன்..!

இயக்குநரும், நடிகருமான சேரன் மற்றும் தயாரிப்பாளரும், நடிகருமான ஷாம் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கோலிசோடா – தி ரைசிங்’ எனும் இணைய தொடரின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இணைய தொடர் பிரபலமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் விரைவில் வெளியாகிறது.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோலி சோடா- தி ரைசிங்’ எனும் இணைய தொடரில் சேரன், ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, ஆர். கே. விஜய் முருகன், பரத் சீனி, மதுசூதனன் ராவ், அம்மு அபிராமி, சீதா, ஸ்வேதா, சுஜாதா, இமான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன், கிஷோர், பாண்டி, உதயராஜ், முருகேஷ், குட்டிமணி  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த இணைய தொடருக்கு இசையமைப்பாளர்கள் எஸ். என். அருணகிரி மற்றும் சைமன் கே கிங் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இந்த இணைய தொடரை தயாரிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தள நிறுவனத்திற்காக தயாரித்திருக்கிறார்.  விரைவில் வெளியாக இருக்கும் இந்த இணைய தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதிலும் வழக்கம் போல் எக்சன் காட்சிகள் அதிகம் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இதனிடையே விஜய் மில்டன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘மழை பிடிக்காத மனிதன்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால்… விஜய் மில்டன் தன்னை அடையாளப்படுத்திய ‘கோலி சோடா’ எனும் திரைப்படத்தின் அடுத்த பாகத்தை இணையத் தொடராக உருவாக்கி இருக்கிறார் என்பதும் இந்த இணைய தொடர் வெளியாகி பாரிய வெற்றியைப் பெறும் என்றும், தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்பத்தையும், திருப்புமுனையும் உண்டாக்கும் எனவும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இணைய தொடர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இதனால் இந்த இணைய தொடர் வெளியானவுடன் அதிக பார்வைகளை பெற்ற இணைய தொடர் என்ற விளம்பரம் வெளியாக கூடும் என அவதானிக்கப்படுகிறது.

Related posts

இலங்கையில் படைப்பாளிகளுக்கு அரசு அச்சுறுத்தல் – யுனஸ்கோ மற்றும் சர்தேச மன்னிப்புச் சபைக்கு தீபச்செல்வன் கடிதம்

User1

சுமார் 3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

sumi

கேரளா அமைச்சருடன் அனுர சந்திப்பு.!

sumi

Leave a Comment