28.6 C
Jaffna
November 10, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வெஸ்லியன் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் வீதி நாடகம்!

கிளிநொச்சியில் சிறுவர்களின் பாதுகாப்பு, அவர்களின் உரிமைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்றைய தினம்(28) மூன்று இடங்களில் “பூக்களைப் பறிக்காதீர்கள்” எனும் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டன.

கிளிநொச்சி வெஸ்லியன் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில், கண்ணகைபுரம் மற்றும் முட்கொம்பன் சிறுவர் அபிவிருத்தி திட்டங்களை இணைந்து திட்டப் பணியாளர்களினால் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.

இந் நாடகம் இன்று காலை 11.00 மணிக்கு கண்ணகைபுரம் மெதடிஸ்த திருச்சபை வளாகத்திலும், மதியம் 1.00 மணிக்கு முட்கொம்பன் பாடசாலை மைதானத்திலும், மாலை 3.00 மணிக்கு பூநகரி சாமிப்புலம் கிராமத்திலும் அருங்கேற்றப்பட்டது.

இதன்போது சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயக்கணேஷ் அவர்களின் விழிப்புணர்வூட்டும் வகையிலான கருத்துரையும் இடம்பெற்றது.

இந்த சிறுவர் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகத்தில் வெஸ்லியன் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் றெபரன் வி.மனோரஞ்சன், உத்தியோகத்தர்கள், நாடகக் கலைஞர்கள், பிரதேச மக்கள், மாணவர்கள், சிறார்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

User1

பன்றி தாக்கி வயோதிப பெண் உயிரிழப்பு !

User1

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு !

User1

Leave a Comment