குழந்தைகளுக்கு பரசிட்டமோலை அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பரசிட்டமோலை கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது அதிக அளவு பரசிட்டமோல் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலை மேலும் மேசமான நிலைக்குள்ளாகும் வாய்ப்புள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.