27.9 C
Jaffna
September 20, 2024
உலக செய்திகள்

பிரித்தானியாவில் தீவிரம் பெறும் சிறுவர்கள் மீதான கத்திக்குத்து தாக்குதல்கள்

பிரித்தானியாவில் 13 வயது சிறுவன் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு Oldbury-வின் West Midlands சந்தை நகரத்தில் Lovett Avenue பகுதியில் உள்ள வீட்டிற்கு பொலிஸார் மாலை 4 மணியளவில் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிவ் மருத்துவ குழுவினர் தேவையான சிகிச்சை வழங்கியும் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

மேலும்,  புலனாய்வு அதிகாரிகள் குழு விசாரணையை நடத்தி வருவதாக வெஸ்ட் மிட்லேண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் ஷான் எட்வர்ட்ஸ் (Shaun Edwards) , இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை விரைவில் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

அத்துடன் எங்களின் சிறப்பு அதிகாரிகள் சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜேர்மனியில் இஸ்ரேலின் துணைதூதரகத்திற்கு வெளியே சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகம்

User1

எலான் மஸ்கிற்கு காலக்கெடு விதித்த பிரேசில் நீதிமன்றம்

User1

இணையத்தை தெறிக்கவிடும் பர்கர் வீடு

User1

Leave a Comment