29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

இன்று கூடவுள்ள நாடாளுமன்றம்!

இலங்கை நாடாளுமன்றம் (Parliament of Sri Lanka) இன்றும் நாளையும் கூடவுள்ளதாக செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர (Kushani Rohanadeera) தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் நேற்று (2) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தின்போது சபை அமர்வுகள் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று காலை 9.30 மணிக்குப் நாடாளுமன்றம் கூடவிருப்பதுடன், 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்று அங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை 4ஆம் திகதி 9.30 மணி முதல் 10.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட விதி என்பன விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளன.

5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related posts

அவுஸ்திரேலிய தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்.!

sumi

சற்று முன் கட்டைக் காட்டில் பொலிசாரால் சட்டவிரோத சுருக்கு வலை பறிமுதல்

Thinakaran

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு !

User1

Leave a Comment