29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதைபொருள் பறிமுதல் !

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதைபொருளை கியூ பிரிவு பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர் .

இதன் இந்திய மதிப்பு 29 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கஞ்சா, பீடி இலைகள், களைக்கொல்லி மருந்து, வலி நிவாரண மாத்திரைகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருகிறது.

கடத்தலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் கியூ பிரிவு பொலிசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (2) தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் ‘சாரஸ்’ என்ற அதிநவீன போதைப்பொருள் கடத்தப்படுவதாக கியூ பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து கியூ பிரிவு ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையில் பொலிசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு இருந்த படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதைபொருள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு படி 29 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக தூத்துக்குடி சவேரியார் புரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் உற்பட 3 பேரை பிடித்து கியூ பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கியூ பிரிவு பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் கஞ்சாவை உருக்கி ஒரு கிலோ சாரஸ் ஆக உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக தூத்துக்குடியில் இருந்து போதைப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது வழக்கமாக நடந்து கொண்டிருந்தாலும் தற்போதைய இந்த கடத்தல் மிகப்பெரிய அளவில் பார்க்கப்படுகிறது.

Related posts

இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர் கைது: மத்திய அரசுக்கு ஸ்டாலின் தகவல்

User1

கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி

User1

திருகோணமலை உள் துறைமுக வீதியில் Ocean Breeze நடைபாதை திறந்து வைப்பு !

User1

Leave a Comment