27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வு வாக்குறுதி – பிரதான வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்படலாம்- விஜயதாச

தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் எவர் வென்றாலும் இரண்டு மூன்று மாதங்களில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களிற்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சம்பள உயர்வு குறித்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர் இது இலஞ்சம் போன்றது என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வு குறித்து வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர், என தெரிவித்துள்ள விஜயதாச ராஜபக்ச உணவுவழங்குவது தகுதிநீக்கம் செய்யப்படக்கூடிய குற்றம் என்றால் ,அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வை வழங்குவதாக தெரிவிப்பது இலஞ்சம் வழங்குவதை போன்றது என தெரிவித்துள்ளார்.

இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என முறைப்பாடு அளிக்கப்பட்டால், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தகுதிநீக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் செலவுகள் குறித்த ஆதாரங்களை சேகரித்து வருகின்றோம்,தேர்தல் ஆணைக்குழுவுடன் இது  குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் எனஅவர் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களின் சொத்துக்கள் குறித்த பிரகடனம் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளும்,இதன் காரணமாக அவர்கள் கைதுசெய்யப்படலாம் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய முன்னணியின் தலைவராக சந்திரிகா

sumi

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக தௌபீக் எம்.பி களத்தில்.!

User1

கண்டி நகரை சுற்றுலா நகராக மாற்ற திட்டம் ; ஜனாதிபதி

User1

Leave a Comment