27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

பர்ஹான் முஸ்தபா அவர்கள் எழுதிய “மரக்கல மீகாமன்” நூல் வெளியீட்டு விழா

பர்ஹான் முஸ்தபா அவர்கள் எழுதிய “மரக்கல மீகாமன்” ரொபர்ட் நொக்ஸின் வரலாற்று புனைகதை நூல் வெளியீட்டு விழா 2024.09.01 ஞாயிற்றுக் கிழமை மூதூர் பேர்ள் கிரேன்ட் மண்டபத்தில் நடுத்தீவு வலுவூட்டல் மற்றும் நலன்புரி சங்கத்தினால் வெளியீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலாநிதி றவூப் ஸெய்ன் (PhD), மற்றும் நூல் திறனாய்வாளராக எழுத்தாளரும், ஆய்வாளருமான சிறாஜ் மஸ்ஹூர், அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு பெருந்திரளான வாசகர்ளும் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வை அஷ்ஷேஹ் N.சியாத் (நழீமி) தலமை தாங்கியதோடு, வெளியீட்டு அமைப்பின் தலைவர் S. M. முஜீப் அவர்களும் பங்கேற்று நேர முகாமைத்துவத்தின் அடிப்படையில்  சிறந்த முறையில் வடிவமைத்து நெறிப்படுத்தி சிறப்பித்திருந்தார்.

சகோதரர் VM.ஹசீன் அவர்கள் நிகழ்ச்சிகளை  தொகுத்து வழங்கியதோடு  நூலின் முதல் பிரதியினை நூலாசிரியரின் தாயார் சபியா உம்மா மற்றும் பாரியார் ஹிதாயா பர்ஹான் வழங்கி வைக்க தொழிலதிபர் வைத்தியர் Y.ஜெஸ்மின் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நூல் மூதூர் JMI வெளியீட்டகத்தினால் பதிப்பு செய்யப்பட்டதோடு, JMI உரிமையாளர் ஆஷா பாலின் அவர்களினால் நூலாசிரியரின் சார்பில் எழுத்தாளரின் மகள் எப்.ஹரீனா செரீனுக்கு  முதல் அரையாண்டுக்கான சிறந்த நாவலுக்கான விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

Related posts

38 நாடுகளுக்கான விசா கட்டணம் ரத்து !

User1

பரந்தன் வீதியில் திடீரென சரிந்த மரம்-தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்

sumi

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கை வந்திறங்கலாம்..!

sumi

Leave a Comment