28 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு நேற்று புதன்கிழமை (04) ஆரம்பமாகி இன்று வியாழக்கிழமையும் (05) 2 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.  

தபால் மூல வாக்களிப்பிற்கென டையாளப்படுத்தப்பட்டுள்ள அரச திணைக்களங்களில் இன்று காலை தொடக்கம் அரச உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தை பொறுத்த வரையில் அதிகாலை தொடக்கம் வாக்கு பதிவுகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதுடன் அரச அதிகாரிகள் வாக்களிப்பில் ஆர்வம் இல்லாமல் காணப்படும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.

இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய தபால் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 712,319 ஆகும். 

வாக்களிக்கத் தகுதி உள்ள வாக்காளர்கள் அனைவரும் தபால்மூல வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.  

Related posts

மலையக மக்கள் முன்னணி மலையக இளைஞர் முன்னணியில் இளைஞர் மாநாடு

User1

தேசிய வைத்திய சாலையில் காபனீரொட்சைட் வாயு செலுத்தப்பட்டு பெண் உயிரிழப்பு!

sumi

செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில்

User1

Leave a Comment