28 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மலையக மக்கள் முன்னணி மலையக இளைஞர் முன்னணியில் இளைஞர் மாநாடு

மலையக மக்கள் முன்னணி மலையக இளைஞர் முன்னணி இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர் மாநாடு (14.09.2024) ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் மலையக இளைஞர் முன்னணியின் தலைவருமான இராதாகிருஸ்ணன் ராஜாராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்

டாக்டர் அப்துல் கலாம் குடும்பத்தின் பேரனும் சர்வதேச அப்துல் கலாம் அறக்கட்டளையின் ஸ்தாபக இணைத்தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே.எம்.ஜே சேக் சலீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விசேட அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டதுடன் இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற இதயக்கனி சஞ்சிகையின் வெளியீட்டாளரும் பிரதம ஆசிரியருமான இதயக்கனி எஸ்.விஜயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மற்றும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன் மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் பொருலாளர் தாழமுத்து சுதாகரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பெருந்திரளான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

Related posts

மகிழூர் சரஸ்வதியில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வு

User1

தருமபுரத்தில் இரு துவக்குகளோடு ஒருவர் கைது..! {படங்கள்}

sumi

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்தது நாசமானது

sumi

Leave a Comment