27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஉலக செய்திகள்

தென் சீனாவை நோக்கி நகரும் யாகி சூறாவளி : பாடசாலைகளுக்கு பூட்டு, விமான சேவைகள் இரத்து

தென் சீனாவை நோக்கி சக்தி வாய்ந்த யாகி சூறாவளி நகர்வதால் வெள்ளிக்கிழமை (06) பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாடசாலைகள் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளதோடு, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஆசியாவைத் தாக்கும் வலிமையான சூறாவளிகளில் ஒன்றான யாகி ஹைனானின் வெப்பமண்டல கடற்கரையில் நிலச்சரிவை எற்படுத்ததும் என தெரிவிக்கப்படுகிறது.

245 கிலோ மீற்றர் அதிக வேகத்தில் தொடர்ந்து காற்று வீசும் என தெரிவிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் பெரில் சூறாவளிக்கு பின்னர் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியாக யாகி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வடக்கு பிலிப்பைன்ஸை தாக்கிய பலம் வாய்ந்த யாகி சூறாவளி வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் ஹைனான் தீவில் உள்ள வென்சாங்கிலிருந்து குவாங்டாங் மாகாணத்தில் உள்ள லீஜோ வரை சீனாவின் கடற்கரையோரம் நிலச்சரிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் வியட்நாம் மற்றும் லாவோஸை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால்  ஹனோயின் நொய் பாய் இன்டர்நேஷனல் உட்பட வடக்கில் உள்ள நான்கு விமான நிலையங்கள் சனிக்கிழமை மூடப்படும் வியட்நாமின் சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை வரை காற்று வீசியதோடு, கடும் இடி மின்னலுடன் மழைபெய்துள்ளது.

ஹைனான், குவாங்டாங், ஹொங்கொங் மற்றும் மக்காவ் ஆகிய பகுதிகளில்  பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால், வெள்ளிக்கிழமை தெற்கு சீனா முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

உலகின் மிக நீளமான கடற்பரப்கை கடந்து செல்ல ஹொங்கொங்கை மக்காவுடன் இணைக்கும் பிரதான பாலம் மற்றும் குவாங்டாங்கில் உள்ள ஜுஹாய் ஆகியவை மூடப்பட்டன.

Related posts

ஆண்டின் முதல் பெரு முழு நிலவு !

User1

பதுளை பொது வைத்தியசாலைக்கு முன் வைத்தியர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!

User1

யாழில் நடைபெற்ற இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு

User1

Leave a Comment