27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வீரர்

நியூசிலாந்து (New Zealand) அணிக்கான பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் (Rangana Herath) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசியாவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது.

இந்தத் தொடர்களுக்கான பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் பயிற்சியாளருமான சக்லைன் முஷ்டாக்கிற்கு பதிலாகவே ரங்கன நியமிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இலங்கை அணிக்காக விளையாடிய ரங்கன ஹேரத், 433 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதேநேரம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் விக்ரம் ரத்தோரும் நியூசிலாந்துக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது நியூசிலாந்தின் ஆலோசகராக செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts

விமல் ரத்னாயக்கா கிளிநொச்சி மக்களை சந்தித்து கலந்துரையாடினார்

User1

ஓய்வூதியதாரர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

User1

தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மாநாடு – ஜனாதிபதி ரணில் பங்குபெற்றுகிறார்!

User1

Leave a Comment