28.6 C
Jaffna
November 10, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யமும் மீனவ பிரதிநிதிகள், வடக்கு பிரஜைகள் அமைப்பு இணைந்து தொடர் பரப்புரை ..!

தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில்  நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு சார்பான தொடர்  பரப்புரை கோப்பாய் தொகுதியில் நேற்றைய தினம் ஆவரங்கால்,  புத்தூர்,  சிறுப்பிட்டி  கோப்பாய், உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதி தீவிரமாக இடம் பெற்றுள்ளது.

சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநரும், சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம் தலமையில் இடம்பெற்றுவரும் பரப்புரையில் வட மாகாண மீனவ அமைப்பு பிரதிநிதிகளும், வடக்கு பிரஜைகள் அமைப்புக்களும்  இணைந்திருந்தன.

இதேவேளை நால்வர் வீடுவீடாக சென்று பரப்புரையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அச்சுவேலி போலீஸாரால்  கைது செய்யப்பட்டு விவிடுவிக்கப்பவிடுவிக்கப்பட்டுள்ளனர் 

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தை தொட்பு கொண்டு கேட்டபோது ஐந்துபேர்வரை பரப்புரையில் ஈடுபட எந்த வித தடையும் இல்லை என தெரிவித்தனர்.

இது தொடர்பாக பவ்ரல் அமைப்பிற்க்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

கெஹேலிய உள்ளிட்ட மூவருக்குப் பிணை

User1

ஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய 66இலங்கையர்கள்

sumi

தேர்தலில் ஒரு பாலின சமூகத்தினர் வாக்களிக்கும் முறை குறித்து வெளியான அறிவிப்பு

User1

Leave a Comment