27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தூபியை பொலிசார் புனரமைக்க விடாது தடுத்து நிறுத்தியமையடுத்து பெரும் பதற்றம்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை செய்யப்படவர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியில் புனர்நிர்மானம் செய்து அதில் இராணுவத்தினால் படுகொலை செய்யப்படவர்கள் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இன்று திங்கட்கிழமை (09) பதித்தனர் இதனை பொலிசார் பலவந்தமாக கழற்றி எடுத்து அங்கு புனரமைப்பு செய்யவிடாது தடுத்ததையடுத்து  பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடையே பெரும் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து பதற்றம் ஏற்பட்டதுடன் பொலிசார் குவிக்கப்பட்டு  சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

1990 ம் ஆண்டு செட்டெம்பர் 9 ம் திகதி  கொக்குவில,; பனிச்சையடீ. பிள்ளையாரடி, சத்துருக் கொண்டான் உட்படபிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள்;, 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 42 பேரும் 25 வயோதிபர்கள் உட்பட  186 அப்பாவி பொதுமக்களை இராணுவத்தினராலும் ஊர்காவல் படையினராலும, ஒட்டுக்குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டவர்களின் 34 வது நினைவேந்தல் இன்றையதினமாகும் அதனை முன்னிட்டு சத்துருக் கொண்டானில் அமைக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்டவர்களின் தூபியில் நினைவேந்தல் செய்வதற்காக படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்

இதில் 1990 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 186 அப்பாவி பொதுமக்கள் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வைட்டு மற்றும்  படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டை நினைவு தூபியில் பதித்துக் கொண்டிருந்தனர் இதன்பொது அங்கு சென்ற கொக்குவில் பொலிசார் இராணுவத்தினராலும் முஸ்லீம் ஊர்காவல் படையினர் ஒட்டுக்குழுக்களால்; படுகொலை செய்யப்பட்ட பகல்லெட்டை பதிக்க முடியாது என வேலை செய்யவிடாது தடுத்தனர் இதன் போது அங்கிருந்த பொதுமக்கள் சமூக செயங்பாட்டாளர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே பெரும் வாய்தர்கம் ஏற்பட்டது

இதன் போது பொதுமக்கள் இது 1995 சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது  ஓய்வு பெற்ற நீதியரசர் கே.பாலிகிட்ணன் தலைமையில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதில் பாதிக்கப்பட்ட மக்களும் அதில் உயிர் தப்பியவர்கள் பலர் இராணுவத்தினர் ஊர்காவல் படையினர் படுகொலை செய்தாக சாட்சியமளித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டு தீhப்பு வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் யாரால் படுகொலை நடந்தது என பெயர் பொறிக்க கல்வெட்டை பொறிக்க கூடாது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வாதத்தில் ஈடுபட்ட நிலையில் தொடர்ந்தும் கல்வெட்டை பதிக்க விடாது பொலிசார் தடுக்க முற்பட்டபோது அதனை மீறி கல்வெட்டு பதிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது அங்கு பொலிஸ் அத்தியட்சகர் பொதுமக்கள் மற்றும் சமூகசெயற்பாட்டாளர்கள் உட்பட 7 பேரை அங்கிருந்து இழுத்துச் சென்று ஜீப்வண்டியில் ஏற்றியதுடன் வேலை செய்து கொண்டிருந்த மேசனை இழுத்து எடுத்து அவரை கொண்டு பதித்த கல்வெட்டை கழற்றி அராஜகத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஜீப்வண்டியில் இழுத்து ஏற்றப்பட்ட 7 பேரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்த பின்னர் அவர்களை அங்கு இறக்கி விட்டனர். அதேவேளை அங்கு பொலிசார் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுத்துவருகின்றனர்.

Related posts

ஜோர்தானில் சிக்கியிருந்த 66 பேர் நாடு திரும்பினர்

sumi

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 66 நாட்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் : தேர்தல் ஆணையகம்

User1

அநுரகுமாரவை கைது செய்யுமாறு சி.ஐ.டியில் முறைப்பாடு

User1

Leave a Comment