28 C
Jaffna
September 19, 2024
கனடா செய்திகள்

அதிக விடுமுறை பெற்ற ஜனாதிபதியாக வரலாற்றில் பதிவான பைடன்

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் (Joe Biden) தனது 4 வருட பதவிக்காலத்தில் 532 விடுமுறை நாட்களை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

இது ஒரு சராசரி அமெரிக்க அலுவலக ஊழியர், 48 ஆண்டுகளில் எடுக்கும் சராசரி விடுமுறை நாட்களுக்கு சமனானது என கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரு அலுவலக ஊழியர் வருடத்திற்கு சராசரியாக 11 விடுமுறை நாட்களை எடுத்து கொள்ள முடியும்.

இருப்பினும், 81 வயதான பைடன், தனது 1326 நாட்கள் பதவிக்காலத்தில் இருந்து 532 நாட்களை விடுமுறைக்காக செலவளித்துள்ளார். இது அவரது பதவிக்காலத்தில் 40 வீதம் ஆகும்.

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாகவும், பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் இருக்கும் நிலையிலும் ஜனாதிபதி இத்தனை நாட்கள் விடுமுறை எடுப்பது ஏற்கத்தக்கது என பைடனுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், அண்மையில் டெலவேரில் உள்ள ரெஹோபோத் கடற்கரையில் ஓய்வு எடுத்துக்கொண்டமை அவர் எடுத்து கொண்ட 16ஆவது தொடர் விடுமுறை என்று குடியரசுக் கட்சியின் தேசியக் குழு வெளிப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, அமெரிக்காவின் வரலாற்றில் மிகக்குறைந்த அளவில் பணியாற்றிய ஜனாதிபதி என்ற பெயரை பைடன் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related posts

இன்று தொடங்கியது டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையேயான நேரடி விவாதம்!

User1

கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் இளைஞன் – சந்தேக நபர்கள் கைது

User1

இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு எதிர்ப்பு வெளியிட்ட சிங்கள கனேடியர்கள்: நகர மேயர் பதிலடி

User1

Leave a Comment