27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தின் 320 வது ஞானச்சுடர் சஞ்சிகை வெளியீடும் பல்வேறு உதவிகளும்…!

யாழ்ப்பாணம்  வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 320 வெளியீடும், பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வும் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர் திரு.சிவநாதன் தலமையில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் திருமுன்னிலையில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக பஞ்ச புராணம் ஓதப்பட்டது. அதனை தொடர்ந்து  வெளியீட்டுரையினை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான இரா.சிறிநடராசா நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன்  உதவித் திட்டங்களாக,

யா/ அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக,

மாணவர்களின் பரீட்சை தேவைகளுக்காக எழுதுபொருள் வகைகள் வழங்கப்பட்டன் முல்லைத்தீவு 

முல்லை இசைக்கலாலயத்துக்கு பிள்ளையார் சிலைக்கான நிதியாக ரூஒஅ 25,000 ரூபா வழங்கப்பட்டது. அதேவேளை மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்திற்கு,

மூளாய் பிரதேச பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு வழங்குவதற்கென  500 கிலோ கிராம்  அரிசியும்  வழங்கிவைக்கப்பட்டது.

மலையகம் – பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த  ப/ சௌதம் தமிழ் மகா வித்தியாலயத்தினுடைய  மாணவி ஒருத்தியின்  மேற்படிப்புக்காக ரூபா  50,000 நிதியும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Exif_JPEG_420
Exif_JPEG_420

Related posts

டெங்கு அதிகரிப்பு

User1

தமிழர் பகுதியில் சற்று முன் மற்றுமொரு கோர விபத்து-பயணிகளின் கதி..!{படங்கள்}

sumi

திருமணமாகாத 35 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!

sumi

Leave a Comment