27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

பெண்ணின் தலை முடி உதிர்ந்து விழும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசிய அழகு கலை நிலைய பணிப்பெண்ணுக்கு விளக்கமறியல் !

பெண்ணின் தலை முடி உதிர்ந்து விழும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசி பொலிஸாரிடமிருந்து தலைமறைவாகியிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் பணிப்பெண்ணை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தலைமறைவாகியுள்ள அந்நிலையத்தின் உரிமையாளருக்கும் மற்றுமொரு பணிப்பெண்ணுக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பணிப்பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,
மினுவாங்கொடை பொரகொடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவர் திருமண நிகழ்வொன்றுக்கு செல்வதற்காக தனது தலை முடியை அழகு படுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அன்று மினுவாங்கொடை நகரத்தில் உள்ள அழகு கலை நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த அழகு கலை நிலையத்தின் பணிப்பெண்கள் இந்த பெண்ணின் தலைமுடியில் கிரீம் வகைகளை பூசியுள்ளனர்.இதன்போது, இந்த பெண்ணின் தலைமுடிகள் திடீரென உதிர்ந்து விழுந்துள்ளன.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

சந்தேக நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்நிலையத்தின் உரிமையாளரும் இரண்டு பணிப்பொண்களும் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மது போதையில் வீடொன்றிற்குள் நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம்

User1

சீனி வரி குறைப்பு விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

User1

மலையகத்திலும் கோர விபத்து-நடு வீதியில் குத்துகரணம் போட்ட லொறி..!

sumi

Leave a Comment