29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

வாக்களிக்கும் போது தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் ஒன்றரை இலட்சம் பேருக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இவ்வாறு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களில், தோட்ட மக்களும், LGBTIQ சமூகமும் பெரும்பாலும் அடங்குவர்.

இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஒரு இலட்சம் வாக்காளர்களில் அடையாள அட்டை இல்லாத மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி தற்காலிக அடையாள அட்டை வழங்க அனைத்து கிராம அதிகாரிகளும் தயாராக உள்ளனர்.

தேர்தல் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், இது தொடர்பாக உதவி, துணை தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

LGBTIQ சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை அங்கீகரிக்க GRC வழங்கப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழின் படி, வாக்குச்சாவடியில் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் இல்லை. மேலும், வீட்டில் இருந்தே வாக்காளர் பதிவேட்டில் முதலில் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.

எனினும், ஒவ்வொரு மாகாணமாகச் சென்று இந்தச் சமூகத்திற்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்தோம். அதன்படி, பல சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தேர்தல் செயல்முறைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் தலையிடும் திறன் குறைவாகவே உள்ளது  என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

வைத்திய ஆலோசனை இன்றி நோயாளர்களுக்கு மருந்து வழங்கல் சம்பந்தமான கலந்துரையாடல்

User1

அனுரவின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல்!

User1

மாணவர்களுக்கு வெற்று வினாத்தாள்-நடந்த கூத்து..!

sumi

Leave a Comment