27.9 C
Jaffna
September 20, 2024
உலக செய்திகள்

இஸ்ரேலில் விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக செல்லும் 69 பேருக்கு பயணச்சீட்டுக்கள் வழங்கி வைப்பு

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச் செல்லும் 69 69 பேருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (09) விமானப் பயணச்சீட்டுக்களை வழங்கி வைத்தது.

இஸ்ரேல், இலங்கை அரசுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை 2,252 இளைஞர்கள் இஸ்ரேலில் விவசாய கைத்தொழில் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

மேலும் இவ் ஒப்பந்தத்தின் கீழ் 5 வருடங்களும் 5 மாத காலத்துக்கு அங்கு பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். இலங்கை அரசு சார்பாக இஸ்ரேலிய வேலைவாய்ப்புகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பணியாட்களை அனுப்புகின்றது. அவர்கள் இஸ்ரேலிய பீபா நிறுவனத்தின் லொட்டரி முறையில் தேர்வு செய்யப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

விமான பயணச்சீட்டுக்களைப்பெற்ற பயனாளிகள் எதிர்வரும் 12 ம் மற்றும் 18ம் ஆகிய தினங்களில் இஸ்ரேல் பயணமாக உள்ளனர்.

மேற்கூறிய நடைமுறையை தவிர எந்தொரு மூன்றாம் தரப்பினர் மூலமும் இஸ்ரேலில் விவசாய த்துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. அதனால் மூன்றாம் தரப்பினரிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

Related posts

இணையத்தை தெறிக்கவிடும் பர்கர் வீடு

User1

அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த கணவர்-சாட்சியங்களை சமர்ப்பித்த மனைவி..!

sumi

இலங்கையில் அதிகரித்துள்ள இணைய குற்றச்செயல்கள்: சீன உதவியை நாடியுள்ள அரசாங்கம்

User1

Leave a Comment