27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

பண்டங்கள் இறக்குமதி வரியைத் திருத்த அமைச்சரவை அனுமதி !

பண்டங்கள் இறக்குமதியின் போது அறவிடப்படும் இறக்குமதி வரியைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பண்டங்கள் இறக்குமதி செய்யும் போது அறவிடப்படும் வரி வகைகளாவன, சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி, விசேட பண்டங்களுக்கான வரி மற்றும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி தொடர்பிலான கொள்கை ரீதியாக அமுல்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

விசேட பண்டங்கள் வரிக்கிணங்க ஒருசில இறக்குமதிப் பண்டங்களைக் குறித்த வரியிலிருந்து விடுவித்து சுங்க இறக்குமதி வரி உள்ளிட்ட பொதுவான இறக்குமதி வரிக் கட்டமைப்பை உட்சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

10. பண்டங்கள் இறக்குமதியின் போது அறவிடப்படும் இறக்குமதி வரியைத் திருத்தம் செய்தல்

எமது நாட்டுக்கு பண்டங்கள் இறக்குமதி செய்யும் போது அறவிடப்படும் வரி வகைகளாவன, சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி, விசேட பண்டங்களுக்கான வரி மற்றும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி தொடர்பிலான கொள்கை ரீதியாக அமுல்படுத்த வேண்டியதும், மற்றும் சமகாலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு கைத்தொழில் மற்றும் வணிகத் துறையிலுள்ள தரப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கீழ்வரும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது :

விசேட பண்டங்கள் வரிக்கிணங்க ஒருசில இறக்குமதிப் பண்டங்களைக் குறித்த வரியிலிருந்து விடுவித்து சுங்க இறக்குமதி வரி உள்ளிட்ட பொதுவான இறக்குமதி வரிக் கட்டமைப்பை உட்சேர்த்தல்

கபிலச் சீனி இறக்குமதிக்கான வரியைத் திருத்தம் செய்தல்

உள்நாட்டுக் கைத்தொழில்களை வலுப்படுத்தும் வகையில் கைத்தொழில் அமைச்சின் விதந்துரைகளுக்கமைய சுங்க இயைபுமுறைக் குறியீடு 225 இன் கீழுள்ள, பாதணிகள், பொதிகள், மின் உபகரணங்கள், ப்ளாஸ்ரிக் மற்றும் இறப்பர் கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் நடுநிலைப் பொருட்கள் தொடர்பிலான இறக்குமதி வரியைத் திருத்தம் செய்தல்

சிறுவர் மற்றும் வளர்ந்தோருக்கான சுகாதார உறிஞ்சுதுணிகள் மற்றும் அவற்றுக்கான மூலப்பொருட்கள் மீதான வரியைக் குறைத்தல்.

இலங்கையில் ப்ளாஸ்ரிக் பாவனையைக் குறைப்பதற்காகவும், மீள்சுழற்சிக்கு ஏற்புடைய வகையிலான வரித் திருத்தங்களை அறிமுகப்படுத்தல்

உள்நாட்டு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்திக் தொழிற்றுறை, அச்சிடல் மற்றும் அச்சு நிறப்பூச்சுக்கள் தொழிற்றுறை, உள்நாட்டு சலவை இயந்திரம், லயிட்டர் உற்பத்தி தொழிற்றுறை மற்றும் சிறுவர்களுக்கான தைத்த ஆடைகள் இறக்குமதி தொடர்பிலான வரி ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல்.

பனை மற்றும் பனம் பொருட்கள் உற்பத்திகளின் ஏற்றுமதியை ஊக்குவித்தல், மின்சாரத்தால் இயங்குகின்ற விளையாட்டுப் பொருட்கள் மற்றும் உள்நாட்டு மருந்து உற்பத்திகளுக்குப் பயன்படுத்தப்படும் திப்பிலியை தனிவேறாக அறிந்து கொள்வதற்காக புதிய தேசிய உபபிரிப்பு சுங்க குறியீட்டை அறிமுகப்படுத்துவதற்கும், உள்நாட்டு மருந்து உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போதான செஸ் வரி விடுவிப்புக்களில் காணப்படும் பொறிமுறைகளைத் தளர்த்துதல்.

மேற்குறிப்பிட்டவாறான வரித் திருத்தங்களை அமுல்படுத்துவதற்காக கீழ்வரும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கட்டளையொன்றை வெளியிட்டு, அதன்மூலம் சுங்க இறக்குமதி வரியை திருத்தம் செய்தல்

1970 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் செஸ் வரியைத் திருத்தம் செய்தல்

2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட பண்டங்கள் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை வெளியிடல்.

ஏற்புடைய வரித் திருத்தங்களுக்கு இணையாக 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டம் மற்றும் 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

Related posts

மன்னாரில் 10 வயது சிறுமி கொடூர கொலை-வீதிக்கு இறங்கிய மக்கள்..!

sumi

மற்றுமொரு கோர விபத்து-இளைஞன் பலி..!

sumi

நல்லையம்பதி அலங்கார கந்தனின் அருணகிரிநாதர் திருவிழா!

User1

Leave a Comment