27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கு இன்றும் (11) நாளையும் (12) சந்தர்ப்பம் !

ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12) இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரசு ஊழியர்களும் இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் அடையாளப்படுத்தாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது வேறு எந்த நாளிலோ வாக்குகளை அளிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

குரங்கம்மை தொற்று : விசேட நடவடிக்கை!

User1

சீமெந்துக்கான செஸ் வரி குறைப்பு

User1

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்

User1

Leave a Comment