27.9 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்உலக செய்திகள்

யூடியூப் காணொளிகளை பார்த்து சத்திரசிகிச்சை செய்த நபர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் யூடியூப் வீடியோக்களின் உதவியுடன் பித்தப்பைக் கல் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அஜித் குமார் என்பவர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து சரண் பொலிஸ் கண்காணிப்பாளர் குமார் ஆஷிஷ் கூறுகையில்,

“இறந்தவர் சரண் மாவட்டத்தின் பூவல்பூர் கிராமத்தைச் சேர்ந்த கோலு என்கிற கிருஷ்ண குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களின் தகவலின்படி, கோலு சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் சரணில் உள்ள தர்மபாகி பஜாரிலுள்ள ஒரு தனியார் கிளினிக்குக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, யூடியூப்பில் அஜித் குமார் என்பவர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து பித்தப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கோலுவின் நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரை பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் செப்டம்பர் 7 அன்று உயிரிழந்தார். யூடியூப்பில் வீடியோக்களைப் பார்த்து அறுவைச் சிகிச்சை செய்ததாக குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இறந்தவரின் தாத்தா, ​​ அஜித் குமார் யூடியூப்பில் வீடியோவைப் பார்த்து என் பேரனுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதை நான் நேரில் பார்த்தேன். பித்தப்பை கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை செய்வதாக அவர் எங்களிடம் தெரிவிக்கவும் இல்லை, அனுமதியும் பெறவில்லை.

கோலுவின் உடல்நிலை மோசமானதையடுத்து அவர் பாட்னாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே கோலு உயிரிழந்தான் என்று அவர் கூறினார்.

இதுதொடர்பாக குடும்பத்தினர் செப். 7ஆம் திகதி அளித்த புகாரின்பேரில் அஜித் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யூடியூப் மூலம் தவறான அறுவைச் சிகிச்சை செய்ததால் சிறுவனின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பெண் மருத்துவரின் கொலை

User1

யாழிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தன் விமானத்தில் செல்லும் போது பலி!!

sumi

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

User1

Leave a Comment